/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கோவில் அருகே சர்ச் கட்ட எதிர்ப்பு தெரிவித்து புகார் கோவில் அருகே சர்ச் கட்ட எதிர்ப்பு தெரிவித்து புகார்
கோவில் அருகே சர்ச் கட்ட எதிர்ப்பு தெரிவித்து புகார்
கோவில் அருகே சர்ச் கட்ட எதிர்ப்பு தெரிவித்து புகார்
கோவில் அருகே சர்ச் கட்ட எதிர்ப்பு தெரிவித்து புகார்
ADDED : ஜூன் 20, 2024 03:39 AM

திருவெண்ணெய்நல்லுார் : சிறுவானுார் கிராமத்தில் கோவில் அருகே சர்ச் கட்ட எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் தாசில்தாரிடம் புகார் அளித்துள்ளனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சிறுவானுார் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள முருகர் கோவிலுக்கு அருகே கடந்த சில மாதங்களாக சர்ச் கட்டி வருகின்றனர்.
இதனை நிறுத்தக் கோரி இந்து முன்னணியினர் தாசில்தாரிடம் புகார் மனு அளித்தனர். மனுவில், திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள சிறுவானுார் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
கிராமத்தில் முழுக்க இந்து மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் கலெக்டர் மற்றும் வி.ஏ.ஓ., அனுமதி பெறாமல் கடந்த சில மாதங்களாக கிறிஸ்துவர்கள் சர்ச் கட்டி வருகின்றனர். இதன் காரணமாக கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சர்ச் கட்டுமான பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.