/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கால்வாய் சீரமைக்காததால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் கால்வாய் சீரமைக்காததால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
கால்வாய் சீரமைக்காததால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
கால்வாய் சீரமைக்காததால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
கால்வாய் சீரமைக்காததால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
ADDED : ஜூன் 20, 2024 03:38 AM

விழுப்புரம் : விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியில், சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் பிரச்னை தீர்க்க கால்வாய் புதுப்பிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம், பூந்தோட்டம் 23வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பல இடங்களில் கழிவு நீர் கால்வாய் சீரமைக்கப் படாமல், திறந்த வெளியில் கழிவு நீர் வெளியேறி வருகிறது.
குறிப்பாக ராமச்சந்திரா லே அவுட் பகுதியில் வீடுகளிலிருந்து வரும் கழிவு நீர், சாலையோரமுள்ள கழிவு நீர் கால்வாய்களில் சென்று, அருகே உள்ள கோலியனுாரான் வாய்க்காலில் கலந்து வருகிறது. இந்த வடிகால் வாய்க்கால் சீரமைக்காமல் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவு நீர் தேங்கி சாலையில் வழிந்தோடி வருகிறது.
பழமையான இந்த வடிகால் வாய்க்காலின் மீது, போடப்பட்டுள்ள சிலாப்புகள் உடைந்து அடைபட்டு கிடப்பதால், இப்படி கழிவு நீர் வழிந்தோடி வருவதாக குறிப்பிடும் அந்த பகுதி மக்கள், தொடர்ந்து ஒரு மாத காலமாக கழிவு நீர் வழிந்து சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதாகவும், இது குறித்து நகராட்சியில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்கின்றனர்.
கால்வாய் சீரமைக்காமல் விட்டுள்ளதால், கழிவு நீர் வீடுகளில் தேங்கி நிற்கிறது. அந்த பகுதியில் சிமெண்ட் சாலை போட்டால், சாலை உயரமாகி கழிவு நீர் வீட்டிற்குள் புகும் என்று, அப்பகுதி மக்கள் புதிய சிமெண்ட் சாலை திட்டத்தையும் அண்மையில் தடுத்து விட்டனர்.
இதனால், நகரின் மையத்தில் உள்ள இந்த பூந்தோட்டம் பகுதியில் கழிவு நீர் கால்வாயை சீரமைக்கவும், அதனை உயர்த்தி புதுப்பித்து, புதிய தார்ச்சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.