/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பைக்கில் மது பாட்டில் கடத்திய நபர் கைது பைக்கில் மது பாட்டில் கடத்திய நபர் கைது
பைக்கில் மது பாட்டில் கடத்திய நபர் கைது
பைக்கில் மது பாட்டில் கடத்திய நபர் கைது
பைக்கில் மது பாட்டில் கடத்திய நபர் கைது
ADDED : ஜூன் 04, 2024 11:44 PM

விக்கிரவாண்டி: புதுச்சேரியிலிருந்து பைக்கில் மதுபாட்டில்களை கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ஞானகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு பாப்பனப்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புதுச்சேரி பகுதியிலிருந்து டி.வி.எஸ்., பைக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்ததில் பைகளில் மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர் விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்த பிரவீன், 32; எனவும், ஓட்டு எண்ணிக்கைக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்பதால் கள்ளத்தனமாக விற்பனை செய்ய கொண்டு செல்வாக தெரிவித்தார். உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, அவரிடமிருந்து 300 மது பாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.