ADDED : ஜூன் 04, 2024 11:45 PM

திண்டிவனம்: திண்டிவனத்தில் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தாலுகா அலுவலகம் அருகே நடந்த விழாவிற்கு, 17வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ரேணுகா இளங்கோவன் தலைமை தாங்கினார். தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி, ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.,மாசிலாமணி, தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, முன்னாள் நகர செயலாளர் கபிலன், நகர்மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் அசோகன், நகர பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி முருகன்.
கவுன்சிலர்கள் சின்னசாமி, பார்த்திபன், சாரங்கபாணி, பரணிதரன், சரவணன், சதீஷ், சுதாகர், அரும்புகுணசேகர் நிர்வாகிகள் ஷாகுல் அமீது, கொடியம்குமார், தினேஷ்பாபு, நத்தர்பாஷா, சுந்தரமூர்த்தி, முருகானந்தம், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.