/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரம் தொகுதியில் 9001 தபால் ஓட்டுகள் பதிவு விழுப்புரம் தொகுதியில் 9001 தபால் ஓட்டுகள் பதிவு
விழுப்புரம் தொகுதியில் 9001 தபால் ஓட்டுகள் பதிவு
விழுப்புரம் தொகுதியில் 9001 தபால் ஓட்டுகள் பதிவு
விழுப்புரம் தொகுதியில் 9001 தபால் ஓட்டுகள் பதிவு
ADDED : ஜூன் 04, 2024 11:44 PM

விழுப்புரம்: விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதியில் 9001 தபால் ஓட்டுகள் பதிவாகியிருந்தது.
விழுப்புரம் லோக்சபா தொகுதியில் 76.47 சதவிகித ஓட்டுகள் பதிவானது. இதில், ஆண் வாக்காளர்கள் 5,69,070, பெண் வாக்காளர்கள் 5,80,256, மாற்று பாலினத்தவர் 81 பேர் என மொத்தம் 11 லட்சத்து 49 ஆயிரத்து 407 பேர் ஓட்டை பதிவு செய்திருந்தனர்.
விழுப்புரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட திண்டிவனம், வானுார், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை சட்டசபை தொகுதிகள் வாரியாக 1,732 ஓட்டு சாவடிகளில் பதிவான ஓட்டுகள், எண்ணும் பணி விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில், நேற்று காலை 7:30 மணிக்கு துவங்கியது.
ஓட்டுகள் எண்ணும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி பார்வையிட்டார். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணும் பணி நடந்தது.
இதில் 3,895 முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 437 ராணுவத்தினர், 4,669 போலீசார் என 9001 பேர் தபால் ஓட்டுகளை பதிவு செய்திருந்தனர்.