ADDED : ஜூன் 22, 2024 05:11 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே லாட்டரி சீட்டு விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மழவராயனுார் மாரியம்மன் கோவில் அருகே 3 நெம்பர் லாட்டரி சீட்டு விற்ற வீரப்பன், 38; என்பவரை கைது செய்தனர்.