ADDED : ஜூன் 22, 2024 05:11 AM
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் மது பாட்டில் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வெவ்வேறு பகுதியில் மது பாட்டில் விற்ற ஆனத்துார் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 38; கண்ணாரம்பட்டு ஜெயா, 48; கீழ்தணியாலம்பட்டு அமுதா, 65; தென்மங்கலம் குமாரி, 52; அருங்குறுக்கை ராமலிங்கம், 50; சக்திவேல், 46; ஆகிய 6 பேரை கைது செய்து இவர்களிடமிருந்து தலா 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.