ADDED : ஜூன் 22, 2024 05:10 AM
செஞ்சி, : செஞ்சி அருகே குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
அப்பம்பட்டில் மளிகைக் கடை நடத்தி வருபவர் ராமு, 70: இவரது கடையில் குட்கா விற்கப்படுவதாக வந்த புகாரின் பேரில், நேற்று சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அதில், 35 கிலோ குட்காவை கைப்பற்றி, ராமுவை கைது செய்தனர்.