ADDED : ஜூலை 02, 2024 11:13 PM
திருவெண்ணெய்நல்லுார், : மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தங்களை எதிர்த்து திருவெண்ணெய்நல்லுாரில் வழக்கறிஞர்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத் தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை விசாரணை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் இவை மூன்றையும் திருத்தி சமஸ்கிருத மொழியில் புதிய சட்டம் திருத்தம் கொண்டு வருவதை கண்டித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், சங்க துணைத் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.