/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ராயப்பேட்டை - சின்னபேட்டை சாலை படுமோசம் ராயப்பேட்டை - சின்னபேட்டை சாலை படுமோசம்
ராயப்பேட்டை - சின்னபேட்டை சாலை படுமோசம்
ராயப்பேட்டை - சின்னபேட்டை சாலை படுமோசம்
ராயப்பேட்டை - சின்னபேட்டை சாலை படுமோசம்
ADDED : ஜூலை 02, 2024 11:15 PM

வானுார் : ராயப்பேட்டையில் இருந்து சின்னபேட்டைக்குச் செல்லும் சாலை படுமோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வானுார் அடுத்த ராயப்பேட்டை கிராமம் அருகே சின்னபேட்டையில் 30க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அன்றாடம் ராயப்பேட்டை ஏரி வழியாக ஆரோவில், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.
இந்த சாலை வழியாக அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்களும், ஆலங்குப்பம் பள்ளிக்கு நடந்து சென்று படித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி ஏரிப்பகுதியையொட்டி இருக்கும் விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் இரு சக்கர வாகனங்களில் மட்டுமின்றி விவசாய பொருட்களை ஏற்றுவதற்கு டிராக்டர், லாரிகளிலும் சென்று வருகின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தார் சாலையாக போடப்பட்டது. தற்போது, இந்த சாலை ஜல்லிகள் பெயர்ந்து ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. 'மெகா சைஸ்' பள்ளத்தால், அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனனர். அடிக்கடி வாகனங்கள் பஞ்சராகும் நிலையும் இருந்து வருகிறது.
ஏற்கனவே சின்னபேட்டை பழங்குடியின மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது, சாலையும் படுமோசமாக மாறி விட்டதால், விழுந்தெழுந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே அப்பகுதி மக்கள் நலன் கருதி, சின்னப்பேட்டை பகுதிக்கு செல்லும் சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.