/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜூலை 02, 2024 11:13 PM
விழுப்புரம் : மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
விழுப்புரம் பூந்தோட்டம் வி.ஆர்.பி., மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் சோழன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் கந்தசாமி வரவேற்றார்.
புள்ளி இயல் ஆய்வாளர் சிவக்குமார், சிறப்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் கோபாலகிருஷ்ணன், தமிழ்செல்வம் மற்றும் ஏட்டுகள் தவமணி, கொளஞ்சி விளக்கவுரை ஆற்றினர்.
மேலும், சமூக நீதி, மனித உரிமைகள், வன்கொடுமை தடுப்புச் சட்டம், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு, போதை மற்றும் புகையிலை பொருட்கள் தடுப்பு, இணைய வழி குற்றங்கள், போக்குவரத்து விதிகள் பற்றி விளக்கப்பட்டது.
இதில், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் பிரித்திவிராஜ் நன்றி கூறினார்.