/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மறியலில் ஈடுபட்ட பா.ம.க., பா.ஜ.,வினர் 100 பேர் மீது வழக்கு மறியலில் ஈடுபட்ட பா.ம.க., பா.ஜ.,வினர் 100 பேர் மீது வழக்கு
மறியலில் ஈடுபட்ட பா.ம.க., பா.ஜ.,வினர் 100 பேர் மீது வழக்கு
மறியலில் ஈடுபட்ட பா.ம.க., பா.ஜ.,வினர் 100 பேர் மீது வழக்கு
மறியலில் ஈடுபட்ட பா.ம.க., பா.ஜ.,வினர் 100 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 02, 2024 11:12 PM
விழுப்புரம், : காணை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பா.ம.க., - பா.ஜ., பிரமுகர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி, காணை அடுத்த சாணிமேடு கிராமத்தில் நேற்று முன்தினம் பா.ம.க., மாநிலத் தலைவர் அன்புமணி தேர்தல் பிரசாரம் செய்தார். இதையொட்டி, இந்த பிரசாரத்திற்கு பொதுமக்களை வரவிடாமல் ஒருசில கட்சி நிர்வாகிகள் தடுத்துள்ளனர்.
இவர்களை கண்டித்து பா.ம.க., ஒன்றிய செயலாளர் ஜெயராஜ், பா.ஜ., ஒன்றிய செயலாளர் வினோத் ஆகியோர் தலைமையில் இரு கட்சியினரும் திரண்டு சாணிமேடு கிராமத்தில் மறியலில் ஈடுபட்டனர். உடன் காணை போலீசார், மறியலில் ஈடுபட்ட 100 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.