/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஏணியில் இருந்து விழுந்த கூலித் தொழிலாளி சாவு ஏணியில் இருந்து விழுந்த கூலித் தொழிலாளி சாவு
ஏணியில் இருந்து விழுந்த கூலித் தொழிலாளி சாவு
ஏணியில் இருந்து விழுந்த கூலித் தொழிலாளி சாவு
ஏணியில் இருந்து விழுந்த கூலித் தொழிலாளி சாவு
ADDED : ஜூன் 04, 2024 05:20 AM
விழுப்புரம் : வளவனுார் அருகே ஏணியிலிருந்து தவறி விழுந்து கூலித் தொழிலாளி இறந்தார்.
விழுப்புரம், கைவல்லியர் தெருவைச் சேர்ந்தவர் செல்வம், 60; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் கோலியனுாரில் உள்ள வாட்டர் சர்வீஸ் கடை ஒன்றில், மேற்கூரை அமைக்க ஏணியில் ஏறி பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திடீரென 10 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.
வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.