/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மீன்பிடிக்க சென்ற மீனவர் படகு கவிழ்ந்து மாயம் மீன்பிடிக்க சென்ற மீனவர் படகு கவிழ்ந்து மாயம்
மீன்பிடிக்க சென்ற மீனவர் படகு கவிழ்ந்து மாயம்
மீன்பிடிக்க சென்ற மீனவர் படகு கவிழ்ந்து மாயம்
மீன்பிடிக்க சென்ற மீனவர் படகு கவிழ்ந்து மாயம்
ADDED : ஜூன் 04, 2024 05:20 AM
மரக்காணம் : மரக்காணம் அருகே கடலில் மீன் பிடித்த போது பைபர் படகு கவிழ்ந்து மீனவர் மாயமானார்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பாலிகால் மகன் குமார், 50; மீனவர். இவரது மகன் சதீஷ், 29; இருவரும் நேற்று அதிகாலை 3:30 மணியளவில் பைபர் படகில் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் படகு நிலை தடுமாறி கடலில் கவிழ்ந்தது.
இருவரும் நீரில் மூழ்கினர். உடன் சதீஷ்குமார், நீந்தி கரைக்கு வந்து விட்டார். குமார், கரை திரும்பாததால், எக்கியார்குப்பம் பகுதி மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள், வருவாய் துறை, போலீசார் மற்றும் கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுத்து விட்டு குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.