/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ராஜராஜேஸ்வரி பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா ராஜராஜேஸ்வரி பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
ராஜராஜேஸ்வரி பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
ராஜராஜேஸ்வரி பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
ராஜராஜேஸ்வரி பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
ADDED : ஜூலை 18, 2024 04:03 AM
திண்டிவனம் : திண்டிவனம் அருகே உள்ள பெலாக்குப்பம் ராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், காமராஜர் படத்திற்கு, பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மலர்துாவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து விழாவையொட்டி நடந்த பேச்சுபோட்டி, கவிதை, பாடல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் பள்ளியின் மூத்த முதல்வர் கலைவாணி, பள்ளி முதல்வர் நாராயணன், உடற்கல்வி ஆசிரியர் பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.