/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கிராம வேளாண் முன்னேற்ற குழு விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் கிராம வேளாண் முன்னேற்ற குழு விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
கிராம வேளாண் முன்னேற்ற குழு விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
கிராம வேளாண் முன்னேற்ற குழு விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
கிராம வேளாண் முன்னேற்ற குழு விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 18, 2024 04:09 AM

வானூர், : வானூர் வட்டாரத்தில் நடப்பாண்டில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வி.கேணிப்பட்டு கிராமத்தில், கிராம வேளாண் முன்னேற்றக் குழு விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.
வானூர் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் தலைமை தாங்கி,'முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானிய விலையில் சணப்பை பசுந்தாள் உர விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக' தெரிவித்தார்.
விவசாயிகள் குழுவிற்கு பயிர் வாரியாக புதிய ரகங்கள் வெளியீடு, நவீன வேளாண் கருவிகள் பயன்பாடு மற்றும் புதிய நவீன தொழில்நுட்பங்களை கையாளுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பயிற்சிக்கு வருகை புரிந்துள்ள விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை இனத்தின் கீழ் மானிய விலையில் நெல் நுண்ணூட்ட உரம், சூடோமோனாஸ், திரவ உயிர் உரங்கள் வழங்கப்பட்டது. துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.