/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஆலம்பூண்டியில் ஸ்ரீரங்க பூபதி மெட்ரிக் பள்ளி துவக்க விழா ஆலம்பூண்டியில் ஸ்ரீரங்க பூபதி மெட்ரிக் பள்ளி துவக்க விழா
ஆலம்பூண்டியில் ஸ்ரீரங்க பூபதி மெட்ரிக் பள்ளி துவக்க விழா
ஆலம்பூண்டியில் ஸ்ரீரங்க பூபதி மெட்ரிக் பள்ளி துவக்க விழா
ஆலம்பூண்டியில் ஸ்ரீரங்க பூபதி மெட்ரிக் பள்ளி துவக்க விழா
ADDED : ஜூன் 22, 2024 05:50 AM

செஞ்சி, : செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் ரங்கபூபதி மெட்ரிக் பள்ளி துவக்கி விழா நடந்தது.
ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவனங்கள் சார்பில் பி.எட்., நர்சிங், பார்மசி, பாலிடெக்னிக், பொறியியல், ஆசிரியர் பயிற்சி, கலை அறிவியல் கல்லுாரிகள் மற்றும் ஸ்ரீரங்கபூபதி இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளி இயங்கி வருகின்றன. நேற்று புதிதாக ஸ்ரீரங்க பூபதி மெட்ரிக் பள்ளி துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு, கல்வி நிறுவன தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். இயக்குனர்கள் சாந்தி, சரண்யா ஆகியோர் வாழ்த்தி பேசினர். பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்றார். அல்ஹிலால் மெட்ரிக் மேல்நிலை பள்ளி செயலாளர் சையத் ரிஸ்வான், பள்ளி முதல்வர் அப்ரோஸ்கான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
உடற்கல்வி இயக்குனர்கள் சைலஜா யோகா, பயிற்சியாளர் சித்ரா, தற்காப்பு கலை மாஸ்டர் சுரேஷ், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகப் பை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.