/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய பயிற்சி: விண்ணப்பம் வரவேற்பு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய பயிற்சி: விண்ணப்பம் வரவேற்பு
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய பயிற்சி: விண்ணப்பம் வரவேற்பு
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய பயிற்சி: விண்ணப்பம் வரவேற்பு
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய பயிற்சி: விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூன் 22, 2024 05:49 AM
விழுப்புரம் : விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூடடுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் பெரியசாமி செய்திக்குறிப்பு:
விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2024-25ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு, மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் மூலம் வரும் ஜூலை 19ம் தேதி மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு பயிற்சி காலம் 12 மாதங்கள் ஆகும். இரண்டு பருவ முறைகளாக தமிழ் வழியில் மட்டும் கற்பிக்கப்படும். பயிற்சிக்கான கட்டணம் 18 ஆயிரத்து 750 ரூபாய் ஆகும்.
பதிவேற்றம் செய்த விண்ணப்பத்தை டவுன் லோடு செய்து, அதில் சுய ஒப்பமிட்டு, விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டை மூலமோ அனுப்ப வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு www.tncu.tn.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலோ அணுகலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.