ADDED : ஜூன் 04, 2024 06:16 AM

திண்டிவனம், திண்டிவனம் வால்டர் நர்சரி பள்ளியில், இலவச கண் சிகிச்சை முகாம்நடந்தது.
விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், திண்டிவனம் நண்பர்கள் லயன்ஸ் குடும்பம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் நடந்த முகாமிற்கு, நண்பர்கள் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டியன் ரமேஷ் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் டேவிட் புஷ்பநாதன் முகாமை துவக்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட முன்னாள் ஆளுநர் சுரேஷ் நீலகண்டன், மாவட்ட தலைவர் செல்வகுமார் பங்கேற்றனர். முகாமில், மாவட்ட தலைவர்கள் காமராஜ், துரை, வெங்கடேசன், சைமன் துரைசிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முகாமில், பரிசோதனை செய்யப்பட்ட 272 பேரில், 136 பேர் அறுவை சிகிச்சைக்கு அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.