/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கராத்தே மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கராத்தே மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
கராத்தே மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
கராத்தே மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
கராத்தே மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
ADDED : ஜூன் 04, 2024 06:17 AM

செஞ்சி : கராத்தே பள்ளி மாணவர்களுக்கு கலர் பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
செஞ்சி மவாதே - கா ஷிட்டோரியா கராத்தே பள்ளியில் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு கலர் பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா தரணி இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது.
முதன்மை பயிற்சியாளர் மணி தலைமை தாங்கினார்.
முகமது அலி முன்னிலை வகித்தார். சிறப்பு பயிற்சியாளர் ஆறுமுகம் வரவேற்றார்.
அகில இந்திய மாஸ்டர் கலைமணி நான்கு மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் மற்றும் 96 மாணவர்களுக்கு தேர்ச்சி அடிப்படையில் கலர் பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மோகன், வழக்கறிஞர் அன்பு உட்பட பலர் பங்கேற்றனர்.