/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரத்தில் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் விழுப்புரத்தில் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்
விழுப்புரத்தில் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்
விழுப்புரத்தில் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்
விழுப்புரத்தில் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்
ADDED : ஜூன் 04, 2024 06:14 AM

விழுப்புரம் : விழுப்புரம் இ.எஸ்., கல்வியியல் கல்லுாரியில் 2009-10ம் ஆண்டு முதல் 2021-23ம் ஆண்டுகள் வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் செந்தில்முருகன் தலைமை தாங்கினார். இ.எஸ்., கல்விக்குழுமம் தலைவர் செல்வமணி சிறப்புரையாற்றினார்.
முன்னாள் மாணவர்கள் தங்களின் கல்லுாரி கால அனுபவங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைதலுக்கு மிக முக்கிய பங்கு வகித்தது பற்றியும், ஒழுக்க பண்புகள் உட்பட பல்வேறு கல்லுாரி அனுபவங்களை பகிர்ந்தனர்.
தொடர்ந்து, முன்னாள் மாணவர் சங்க தலைவர் பாக்கியலட்சுமி, செயலாளர் கணபதி, பொருளாளர் வீரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், தேர்வு செய்யப் பட்டோர் முன்னாள் மாணவர் சங்க கூட்டத்தை எப்படி சிறப்பாக நடத்த வேண்டும், கல்லுாரி, மாணவர்கள் முன்னேற்றத்திற்கு எடுக்க வேண்டிய வழிமுறைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
இதில், துணை பேராசிரியர்கள், பயிற்சி மாணவ ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.