/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கல்வித்துறை அமைச்சு பணியாளர்கள் கூட்டம் கல்வித்துறை அமைச்சு பணியாளர்கள் கூட்டம்
கல்வித்துறை அமைச்சு பணியாளர்கள் கூட்டம்
கல்வித்துறை அமைச்சு பணியாளர்கள் கூட்டம்
கல்வித்துறை அமைச்சு பணியாளர்கள் கூட்டம்
ADDED : ஜூன் 04, 2024 06:13 AM

விழுப்புரம், : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சு பணியாளர்கள் நலச்சங்க மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
வி.ஆர்.பி., மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உதயகுமார், மணிகண்டன், வினோத்குமார், மேகநாதன், பாரதி, சசிக்குமார், ஜெயமதி, ருக்குமணி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்து 13 ஆண்டுகள் கடந்தவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும்.
அமைச்சு பணியாளர்களுக்கு 2 சதவீதம் பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் பணிநிலை மாற்றம் வழங்கப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.