/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மரக்காணத்தை முந்திய கள்ளக்குறிச்சி: அதிகரிக்கும் கள்ளச்சாராய பலிகள் மரக்காணத்தை முந்திய கள்ளக்குறிச்சி: அதிகரிக்கும் கள்ளச்சாராய பலிகள்
மரக்காணத்தை முந்திய கள்ளக்குறிச்சி: அதிகரிக்கும் கள்ளச்சாராய பலிகள்
மரக்காணத்தை முந்திய கள்ளக்குறிச்சி: அதிகரிக்கும் கள்ளச்சாராய பலிகள்
மரக்காணத்தை முந்திய கள்ளக்குறிச்சி: அதிகரிக்கும் கள்ளச்சாராய பலிகள்
ADDED : ஜூன் 20, 2024 03:53 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கடந்தாண்டு கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் இறந்த நிலையில் தற்போது கள்ளக்குறிச்சியில் 17 பேர் இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தில், கடந்தாண்டு மே 13ம் தேதி விற்கப்பட்ட மெத்தனால் கலந்த பாக்கெட் சாராயத்தை குடித்து 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அனைவரும் விழுப்புரம் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் எக்கியர்குப்பத்தைச் சேர்ந்த சங்கர்,52; தரணிவேல், 50; சுரேஷ், 40; ராஜமூர்த்தி,60; மலர்விழி, 70; மண்ணாங்கட்டி,47; கன்னியப்பன், 58; உள்ளிட்ட 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 பேரும் இறந்தனர்.
விசாரணையில் சென்னை தனியார் தொழிற்சாலையில் பயன்படுத்தாமல் கிடந்த மெத்தனாலை வாங்கி வந்து, புதுச்சேரி, மரக்காணம் பகுதி சாராய வியாபாரிகள், அதனை பாக்கெட் ரூ.30க்கு விற்றுள்ளனர். அதனை வாங்கி குடித்த கூலி தொழிலாளர்கள் இறந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக மரக்காணம் போலீசார் கொலை வழக்கு பதிந்து, மெத்தனால் சாராயத்தை விற்பனை செய்த சென்னை தனியார் தொழிற்சாலை உரிமையாளர் இளையநம்பி மற்றும் மரக்காணம், புதுச்சேரி சாராய வியாபாரிகள் முத்து, அமரன், ஆறுமுகம், ஏழுமலை, பர்கத்துல்லா உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அப்போதைய விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநாதா மற்றும் மதுவிலக்கு டி.எஸ்.பி., உள்ளிட்ட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் பாக்கெட் சாராயம் குடித்த 17 பேர் இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.