ADDED : ஜூலை 12, 2024 11:02 PM
வானூர்: கிளியனூர் அருகே ஆற்றுக்குட்டையில் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்தார்.
திண்டிவனம் பெருமாள் கோவில் மாட வீதியை சேர்ந்தவர் ராமலிங்கம், 67; விவசாயி. இவருக்கு கிளியனூர் அடுத்த நல்லாவூரில் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ராமலிங்கம், தனது நிலத்திற்கு வந்துள்ளார்.
அப்போது அங்குள்ள தண்ணீர் நிரம்பிய குட்டையில் கால் அலசுவதற்கு சென்ற போது, தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.