/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கல்லுாரி மாணவி மாயம் போலீசில் தந்தை புகார் கல்லுாரி மாணவி மாயம் போலீசில் தந்தை புகார்
கல்லுாரி மாணவி மாயம் போலீசில் தந்தை புகார்
கல்லுாரி மாணவி மாயம் போலீசில் தந்தை புகார்
கல்லுாரி மாணவி மாயம் போலீசில் தந்தை புகார்
ADDED : ஜூலை 12, 2024 11:01 PM
திண்டிவனம்: கல்லுாரிக்கு சென்ற மகள் வீடு திரும்பவில்லை என்று, தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
திண்டிவனம் அருகே உள்ள தாதாபுரம் சிங்காணிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தீபன். இவரது மகள் ஹரிணி, 19; இவர் திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளாறிலுள்ள தனியார் மகளிர் கல்லுாரியில் பி.எஸ்சி.,இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் கடந்த 9 ம் தேதி வழக்கம் போல காலை 8 மணிக்கு கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை.
இதுபற்றி அவரது தந்தை பார்த்தீபன் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.