ADDED : மார் 12, 2025 07:45 AM

விழுப்புரம் : விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில், இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறு சீரமைப்பில் அநீதி என, தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது.
பிடாகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன் தலைமை தாங்கினார். கோலியனுார் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகவேல் வரவேற்றார். அமைச்சர் பொன்முடி, மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாநில இளைஞரணி துணைச்செயலாளர் அப்துல்மாலிக் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், மாவட்ட துணைச் செயலாளர் தயா இளந்திரையன், தலைமைக்கழக வழக்கறிஞர் சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, பிரபாகரன், நகர செயலாளர் ஜீவா, பொதுக்குழு உறுப்பினர்கள் பஞ்சநாதன், சம்பத், மாவட்ட பொறியாளர் அணி செல்வகுமார், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அன்பு, ராஜவேல், பாலாஜி, கலைவாணன், பிரேம், தேவேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.