/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பஸ்சில் பயணம் செய்த பெண் வழக்கறிஞருக்கு மிரட்டல்; மயிலம் அருகே விவசாயி கைது பஸ்சில் பயணம் செய்த பெண் வழக்கறிஞருக்கு மிரட்டல்; மயிலம் அருகே விவசாயி கைது
பஸ்சில் பயணம் செய்த பெண் வழக்கறிஞருக்கு மிரட்டல்; மயிலம் அருகே விவசாயி கைது
பஸ்சில் பயணம் செய்த பெண் வழக்கறிஞருக்கு மிரட்டல்; மயிலம் அருகே விவசாயி கைது
பஸ்சில் பயணம் செய்த பெண் வழக்கறிஞருக்கு மிரட்டல்; மயிலம் அருகே விவசாயி கைது
ADDED : மார் 12, 2025 07:45 AM

மயிலம் : மயிலம் அருகே பஸ்ஸில் பயணம் செய்த பெண் வழக்கறிஞரை திட்டி, கொலை மிரட்டல் விடுத்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராேஜந்திரன் மகள் இந்துஜா அனுல்ஸ், 27; இவர், சென்னை, ஐகோர்ட் வழக்கறிஞர். இவர், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு தனியார் ஆம்னி பஸ்சில், சென்னையில் இருந்து தேனிக்கு பயணம் செய்தார்.
அப்போது, வழக்கறிஞர் இந்துஜா அனுல்ஸ்சுடன் பயணம் செய்த தேனி அடுத்த வீரபாண்டியைச் சேர்ந்த விவசாயியான ரஞ்சித்குமார், 39; என்பவரிடம் மொபைல் போன் சார்ஜர் கேட்டு வாங்கியுள்ளார்.
சிறிது நேரத்தில் ரஞ்சித்குமார் சார்ஜரை கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார் தகாத வார்த்தையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து இந்துஜா அனுல்ஸ் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் நடந்த இடம் மயிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் போலீசார் வழிகாட்டுதலின் பேரில் மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், மயிலம் போலீசார் ரஞ்சித்குமார் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.