ADDED : ஜூலை 23, 2024 11:12 PM

விழுப்புரம் : கோலியனுார் ஒன்றியம், தோகைப்பாடி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமணன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி முன்னிலை வகித்தார்.
ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், துணைச் சேர்மன் உதயகுமார், பி.டி.ஓ.,க்கள் ராஜவேல், வேங்கடசுப்ரமணியன், மாவட்ட கவுன்சிலர்கள் வனிதா ஹரிராமன், தமிழ்ச்செல்வி கேசவன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, துணைச் செயலாளர் ஜெயா பன்னீர்செல்வம், பொருளாளர் காமராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துசாமி.
ஊராட்சி தலைவர்கள் பாஞ்சாலி பிரசன்னா, கிருஷ்ணமூர்த்தி, கப்பூர் ராஜா, செல்வன், ராஜேந்திரன், பாலமுருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் பட்டு ஆறுமுகம், கப்பூர் ஆறுமுகம், கிளைச் செயலாளர்கள் நேதாஜி, குப்புராஜ் மற்றும் ஜெயமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.