/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வானுார் ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் வானுார் ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்
வானுார் ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்
வானுார் ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்
வானுார் ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்
ADDED : ஜூலை 23, 2024 11:12 PM

வானுார் : வானுார் ஒன்றியத்திற்குட்பட்ட 7 ஊராட்சிகளுக்கு, மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது.
திருச்சிற்றம்பலம், ஆகாசம்பட்டு, துருவை, ராவுத்தன்குப்பம், புளிச்சப்பள்ளம், ஆப்பிரம்பட்டு, ராயபுதுப்பாக்கம் ஆகிய 7 ஊராட்சிகளைச் சேர்ந்த பொது மக்களுக்காக மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது.
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்த முகாமை, ஒன்றிய சேர்மன் உஷா முரளி மனுக்களைப் பெற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு, உதவி திட்ட அலுவலர் சுரேஷ்குமார், பி.டி.ஓ.,க்கள் கார்த்திகேயன், தேவதாஸ், தாசில்தார் நாராயணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
முகாமில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் துறை, கூட்டுறவு உட்பட 15 துறைகள் சார்ந்த அலுவலர்கள், பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
நிகழ்ச்சியில், கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, ஒன்றிய துணைச் சேர்மன் பருவகீர்த்தனா விநாயகமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் புவனேஸ்வரி ராமதாஸ், காமாட்சி விஜயரங்கன், ஊராட்சி தலைவர்கள் வெங்கடேசன், அன்பழகி மணிபாலன், காமாட்சி வெங்கடேசன், ரவிசங்கர், ஜெய்சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.