/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட செயல்வீரர் கூட்டம் கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட செயல்வீரர் கூட்டம்
கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட செயல்வீரர் கூட்டம்
கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட செயல்வீரர் கூட்டம்
கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட செயல்வீரர் கூட்டம்
ADDED : ஜூலை 23, 2024 11:11 PM
விழுப்புரம் : தமிழக கட்டட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கம், அகில இந்திய அமைப்பு சாரா மற்றும் கட்டட தொழிலாளர்கள் பொது நல மத்திய முன்னேற்ற சங்கம் சார்பில், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுார் மாவட்ட நிர்வாகிகள் செயல்வீரர் கூட்டம் நடந்தது.
விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பொருளாளர் முனுசாமி, துணைத் தலைவர்கள் மும்மூர்த்தி, விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். மாநில தலைவர் மகாலிங்கம் சிறப்புரையாற்றினார். சட்ட ஆலோசகர் சக்திவேல் தீர்மானம் குறித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், பென்ஷனர்களுக்கு வழங்கும் ஓய்வூதியம் 1,200ல் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்றுவர மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்க வேண்டும்.
நலவாரியம் வழங்கும் திருமண உதவிதொகை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகர செயலாளர் முருகன் நன்றி கூறினார்.