/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
ADDED : ஜூலை 22, 2024 01:31 AM

விக்கிரவாண்டி : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
முண்டியம்பாக்கத்தில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கி ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசுகையில், 'ரத்ததானம் செய்வதில் தன்னார்வலர்களின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. ரத்ததானம் மூலம் கோடிக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படுகின்றது.
ரத்ததானம் வழங்கும் தன்னார்வலர்கள் எந்த ஒரு பிரதிபலன், எதிர்பார்ப்புகள் இன்றி சேவை செய்து வருகின்றனர். அவர்களை இந்த நேரத்தில் பாராட்டுவதில் பெருமையடைகிறேன்' என்றார்.
முன்னதாக ரத்த வங்கி துறை தலைவர் சத்தியலட்சுமி வரவேற்றார். கல்லுாரி டீன் ரமாதேவி, துணை முதல்வர் தாரணி, மருத்துவ கண்காணிப்பாளர் தரனேந்திரன், ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், ஏ.ஆர்.எம்.ஓ., வெங்கடேசன், மனநல சமூக பணியாளர் அசோக்குமார், இணை பேராசிரியை சூரியலட்சுமி, ரத்த பரிமாற்று அலுவலர் விஜயா, மாவட்ட திட்ட அலுவலர் கவிதா மற்றும் டாக்டர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.