ADDED : ஜூலை 22, 2024 01:31 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியம் அய்யூர் அகரம் கிராமத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில் காலை உணவு திட்ட துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி தலைமை தாங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.
தலைமை ஆசிரியை உஷா, பள்ளி மேலாண்மை குழு ரவிதுரை, கல்விக் குழு சந்திரன், சுப்ரமணி, அறிவழகன், சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.