/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பென்காக் சிலாட் மாநில விளையாட்டு போட்டி பென்காக் சிலாட் மாநில விளையாட்டு போட்டி
பென்காக் சிலாட் மாநில விளையாட்டு போட்டி
பென்காக் சிலாட் மாநில விளையாட்டு போட்டி
பென்காக் சிலாட் மாநில விளையாட்டு போட்டி
ADDED : ஜூலை 21, 2024 07:36 AM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் மாநில பென்காக் சிலாட் சாம்பியன் ஷிப் போட்டி துவக்க விழா நடந்தது.
சூர்யா கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைமை நிர்வாக அதிகாரி பெர்னான்டோ தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விளையாட்டை துவக்கி வைத்தார். பென்காக் சிலாட் சங்க மாவட்ட தலைவர் மாஜிசிங் வரவேற்றார்.
போட்டியில் தமிழகத்தில் பல்வேறு நகரங்களிலிருந்து 300 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
அனைத்து விளையாட்டுக் கழக ஒருங்கிணைப்பாளர் மணி, மாநில பொதுச் செயலாளர் மகேஷ் பாபு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயக்குமாரி, உடற்கல்வி இயக்குனர் ஜோதிபிரியா, மாவட்ட பென்காக் சிலாட் ஒருங்கிணைப்பாளர் முரளி, சூர்யா கல்லுாரி முதல்வர் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
சங்க செயலாளர் பரந்தாமன் நன்றி கூறினார்.