/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சத்தியமங்கலத்தில் கிராம சபை கூட்டம் சத்தியமங்கலத்தில் கிராம சபை கூட்டம்
சத்தியமங்கலத்தில் கிராம சபை கூட்டம்
சத்தியமங்கலத்தில் கிராம சபை கூட்டம்
சத்தியமங்கலத்தில் கிராம சபை கூட்டம்
ADDED : ஜூலை 21, 2024 07:37 AM

செஞ்சி: சத்தியமங்கலத்தில் அரசு வீடு கட்டும் திட்டத்திற்கு பயனாளிகளை தேர்வு செய்வதற்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது.
ஊராட்சி தலைவர் அபர்ணா தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் சீதாலட்சுமி, முல்லை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் ஆகியோர் சிறப்பு பார்வையாளர்களாக பங்கேற்றனர்.
ஊராட்சி செயலாளர் பாஸ்கரன் தீர்மானம் வாசித்தார்.
இதில், கனவு இல்லம் மற்றும் ஊரக குடியிருப்புகளை பழுது நீக்கம் செய்வது தொடர்பாக தகுதியான பயனாளிகள் தேர்வு செய்து ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றிய கவுன்சிலர் டிலைட்ஆரோக்கியராஜ், ஊராட்சி துணைத் தலைவர் சித்ரா ரவி, பட்டதாரி ஆசிரியர் திலீப், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.