ADDED : ஜூலை 21, 2024 07:36 AM
விழுப்புரம்: காணை அருகே மகளைக் காணவில்லை என போலீசில், தாய் புகார் அளித்துள்ளார்.
விக்கிரவாண்டி அடுத்த பாப்பனபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ரூபினி, 17; கேரளாவில் பிளஸ் 2 வரை படித்துள்ள இவர், காணை அருகே உள்ள அகரம் சித்தாமூரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் பாட்டியிடம் சான்றிதழ் பெற வேண்டும் என கூறி கேரளா செல்வதாக கூறிச் சென்றவர் அங்குபோய் சேரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாய் ஜான்சிராணி அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.