/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஆரோவில் செயல்வழி குழு கைப்பந்து போட்டி ஆரோவில் செயல்வழி குழு கைப்பந்து போட்டி
ஆரோவில் செயல்வழி குழு கைப்பந்து போட்டி
ஆரோவில் செயல்வழி குழு கைப்பந்து போட்டி
ஆரோவில் செயல்வழி குழு கைப்பந்து போட்டி
ADDED : ஜூன் 04, 2024 06:22 AM

வானுார் : ஆரோவில் கிராம செயல்வழி குழு, இளைஞர்களிடையேயான கைப்பந்து போட்டி நடந்தது.
ஆரோவில் கிராம செயல்வழிக்குழு அலுவலக வளாக மைதானத்தில் நடந்த போட்டியில் 18 அணிகள் விளையாடின.
இதில், பொம்மையார்பாளையம் அணி முதல் இடத்தையும், தைலாபுரம் அணி 2வது இடத்தையும், மாத்துார் அணி 3வது இடத்தையும், இடையன்சாவடி அணி 4வது இடத்தையும் பிடித்தனர்.
போட்டிக்கு, புதுச்சேரி கைப்பந்து சங்கத்தைச் சேர்ந்த 5 பேர் நடுவர்களாக செயல்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி இந்திய விளையாட்டு நிறுவன பொறுப்பாளர் ராஜேஷ், ஆரோவில் கிராம செயல்வழிக்குழு நிர்வாகி ஆலன் பெர்னார்டு, ஆரோவில் கிராம செயல்வழிக்குழு இயக்குனர்கள் ஜெரால்டு மோரீஸ், அன்பு, எலெக்ட் ஸ்போர்ட் பயிற்சி மைய இயக்குநர் எபினேசர் கலந்து கொண்டு பரிசுத்தொகை மற்றும் பதக்கங்களை வழங்கினர்.