ADDED : ஜூன் 04, 2024 06:19 AM
விழுப்புரம், : விழுப்புரத்தில் பென்ஷனர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் குக சரவணபவன் முன்னிலை வகித்தார். மாவட்டகுழு உறுப்பினர் ஜானகிராமன் வரவேற்றார். செயலாளர் விவேகானந்தன் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில், ஓய்வூதியர் களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை இலவச மருத்துவமாக நடைமுறைப்படுத்த வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.