/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பாதாள சாக்கடை பணி குறித்து வழக்கு: நீதிபதிகள் உத்தரவு பாதாள சாக்கடை பணி குறித்து வழக்கு: நீதிபதிகள் உத்தரவு
பாதாள சாக்கடை பணி குறித்து வழக்கு: நீதிபதிகள் உத்தரவு
பாதாள சாக்கடை பணி குறித்து வழக்கு: நீதிபதிகள் உத்தரவு
பாதாள சாக்கடை பணி குறித்து வழக்கு: நீதிபதிகள் உத்தரவு
ADDED : ஜூன் 04, 2024 11:30 PM
திண்டிவனம்: திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பணிகளில் உள்ள குளறுபடியை நிவர்த்தி செய்ய வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திண்டிவனத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். பா.ஜ., மாநில இளைஞர் அணி செயலாளர்.
இவர், திண்டிவனத்தில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நடைபெறும் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம், சாலைகள் சரியாக சீரமைக்கப்படாமல் உள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்படுவதாக ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயண பிரசாத், லட்சுமிநாராயணன் ஆகியோர் மனுதாரர் கோரிக்கையின் படி, திண்டிவனத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள், சாலைகள் அமைப்பது, பைப் புதைப்பது உள்ளிட்ட பணிகளை குறையில்லாமல் முறையாக சீரமைக்க வேண்டும்.
மனுதாரரின் கோரிக்கை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அவருடன் கலந்து பேசி, நான்கு வாரத்திற்குள் முடிவு மேற் கொள்ள வேண்டும் என கடந்த 29ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.