/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
ADDED : ஜூன் 07, 2024 07:21 PM

செஞ்சி:மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.
இரவு 11:00 மணிக்கு உற்சவர் அங்காளம்மனுக்கு எழிலரசி அலங்காரம் செய்யப்பட்டு சிவ வாத்தியம், மேள, தாளம் முழங்க ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு கோவில் பூசாரிகளும், பக்தர்களும் தாலாட்டு பாடல்களை பாடி அம்மனை வழிபட்டனர். இரவு 12:00 மணிக்கு மகா தீபாரதனையுடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது.
கலெக்டர் பழனி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சுரேஷ், அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.