/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/திண்டிவனத்தில் குப்பை கொட்ட இடமில்லை சாலையோரம் கொட்டுவதால் சுகாதார சீர்கேடுதிண்டிவனத்தில் குப்பை கொட்ட இடமில்லை சாலையோரம் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
திண்டிவனத்தில் குப்பை கொட்ட இடமில்லை சாலையோரம் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
திண்டிவனத்தில் குப்பை கொட்ட இடமில்லை சாலையோரம் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
திண்டிவனத்தில் குப்பை கொட்ட இடமில்லை சாலையோரம் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
ADDED : ஜூன் 07, 2024 06:37 AM

திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சி பகுதியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்ட இடமின்றி சாலையோரம் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
திண்டிவனம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் நுண் உரமாக்கும் மையம், சலவாதி சுடுகாடு பகுதி, அவரப்பாக்கம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் திண்டிவனம் நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளில் இருந்தும், தினமும் சேகரமாகும் குப்பைகைளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த குப்பை யார்டில் நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்திற்காக மைக்ரோ கம்போசிங் மையம் கட்டம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் நகர பகுதிகளில் நகராட்சி குப்பைகளைக் கொட்டுவதற்கு போதுமான இடம் இல்லை.
இதனால் நகராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் யார்டிற்கு கொண்டு போகாமல், திண்டிவனம் காவேரிப்பாக்கம் ஏரிக்கரை, புதிய பஸ் நிலையம் வர உள்ள இடத்திற்கு அருகே இருக்கும் ஏரி, கர்ணாவூர் சுடுகாடு பகுதி, திண்டிவனம் - மயிலம் ரோட்டில் உள்ள புறவழிச்சாலையின் இரண்டு பக்கம் என கண்ட இடங்களில் குப்பைகளை மலை போல் கொட்டி வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் குப்பைகளைக் கொட்டி போராட்டம் நடத்தியும், நகராட்சி நிர்வாகம் இதுவரை கண்டுகொள்ளவில்லை.குப்பைகள் கொட்டுவதற்கு நகராட்சி சார்பில் இடம் பார்க்கப்படும் என நகர மன்ற தலைவர் பல முறை நகர மன்ற கூட்டத்தில் உறுதியளித்தும் இதுவரை இடம் தேர்வு செய்யப்படவில்லை.பொது மக்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு, திண்டிவனம் நகராட்சி குப்பைகளைக் கண்ட இடங்களில் கொட்டி வரும் நகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான், குப்பைகளை பொது இடத்தில் கொட்டமாட்டார்கள்.
குப்பை கொட்டும் போராட்டம்; தி.மு.க., கவுன்சிலர் அறிவிப்பு
திண்டிவனம் நகராட்சி எல்லையான (விழுப்புரம் மார்க்கம்) கூட்ரோட்டிலிருந்து, சென்னை புறவழிச்சாலை செல்லும் பகுதியில் சாலையோரம் தினமும் நகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டுவதை தடை செய்ய வேண்டும் என நகராட்சி சுகாதார அலுவரிடம் பல முறை புகார் கூறியும், குப்பை கொட்டுவது தொடர்கிறது. இதை கண்டிக்கும் வகையில் 32வது வார்டு சார்பில் பொது மக்களுடன் இணைந்து நகராட்சி அலுவலகம் எதிரில் குப்பை கொட்டும் பேராட்டம் நடத்தப்படும் என 32வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.