/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் மேல்மலையனுாரில் 2 பேர் கைது கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் மேல்மலையனுாரில் 2 பேர் கைது
கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் மேல்மலையனுாரில் 2 பேர் கைது
கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் மேல்மலையனுாரில் 2 பேர் கைது
கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் மேல்மலையனுாரில் 2 பேர் கைது
ADDED : ஜூன் 08, 2024 04:17 AM
அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் 2 பேரை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மற்றும் திருநங்கையை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் மேக்களூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன், 45; அதே ஊரைச் சேர்ந்தவர் கோபாலன் மகன் விக்னேஷ், 23; இருவரும் நேற்று முன்தினம் அமாவாசை தினத்தை முன்னிட்டு மேல்மலையனுாரில் அங்காளம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
அதிகாலை 2:00, மணிக்கு வீடு திரும்புவதற்காக ஏரிக்கரை பார்க்கிங் பகுதியில் பைக் நிறுத்தியிருந்த இடத்திற்கு பைக்கை எடுக்க வந்தனர்.
அப்போது அங்கு, செஞ்சி, சிறுகடம்பூரைச் சேர்ந்த துரைசாமி மகன் அப்பு என்கிற பால்ராஜ்குமார், 22; என்பவர் பைக் மீது அமர்ந்திருந்தார்.
அவருடன் வடலுார் அடுத்த மேலகொலகொடியைச் சேர்ந்த நிதிதா, 24; எனும் திருநங்கையும் உடனிருந்தார்.
பைக்கிலிருந்து பால்ராஜ்குமாரை கீழே இறங்கும்படி ஆனந்தன் கூறினார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த பால்ராஜ்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தனையும், விக்னேஷையும், தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
வெட்டுக்காயம் அடைந்த ஆனந்தன், விக்னேஷ் இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து பால்ராஜ்குமார் மற்றும் திருநங்கை நிதிதாவையும் கைது செய்தனர்.