/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரூ.1.33 கோடி தங்கம் பறிமுதல் விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரூ.1.33 கோடி தங்கம் பறிமுதல்
விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரூ.1.33 கோடி தங்கம் பறிமுதல்
விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரூ.1.33 கோடி தங்கம் பறிமுதல்
விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரூ.1.33 கோடி தங்கம் பறிமுதல்
ADDED : ஜூன் 20, 2024 03:47 AM

விழுப்புரம் : விழுப்புரம் ரயில் நிலையத்தில், ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.1.33 கோடி மதிப்பிலான 2,000 கிராம் தங்க கட்டிகள் மற்றும் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில், தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீமதி உள்ளிட்டோர் ரயில்களில் சோதனை நடத்தினர்.
6வது பிளாட்பாரத்தில், சந்தேகத்திற்கிடமான முறையில், கையில் பையுடன் நின்ற நபரை பிடித்து, விசாரித்தனர். அவர், விழுப்புரம் புதுத்தெரு பழனிவேல் மகன் வரதராஜன், 49; என தெரிய வந்தது. அவரது பையை சோதனை செய்ததில், தங்க நகைகள், தங்க கட்டிகள் இருப்பது தெரிய வந்தது. அதன் மதிப்பு 1 கோடியே 33 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தகவல் அறிந்த விற்பனை வரி நுண்ணறிவு அதிகாரிகள் விழுப்புரம் வந்து விசாரித்தனர்.
அதில், நகை தயாரிப்பு வேலை செய்யும் விழுப்புரம், திருவண்ணாமலை, ஆரணி பகுதி பொற்கொல்லர்களிடம் கொடுப்பதற்காக, சென்னை நகை வியாபாரிகளிடமிருந்து தங்க கட்டிகளை வாங்கி வந்ததாக கூறினார். அதற்குரிய ஆவணங்களை அவர் சமர்ப்பிக்கவில்லை. இதனையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்து, மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.