/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விக்கிரவாண்டியில் வெற்றி உறுதி: பா.ம.க., மாநில தலைவர் அன்புமணி பேட்டி விக்கிரவாண்டியில் வெற்றி உறுதி: பா.ம.க., மாநில தலைவர் அன்புமணி பேட்டி
விக்கிரவாண்டியில் வெற்றி உறுதி: பா.ம.க., மாநில தலைவர் அன்புமணி பேட்டி
விக்கிரவாண்டியில் வெற்றி உறுதி: பா.ம.க., மாநில தலைவர் அன்புமணி பேட்டி
விக்கிரவாண்டியில் வெற்றி உறுதி: பா.ம.க., மாநில தலைவர் அன்புமணி பேட்டி
ADDED : ஜூன் 20, 2024 03:45 AM
விக்கிரவாண்டி : ''விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் பலத்தை நம்பி நிற்கும் எங்களுக்கு வெற்றி உறுதி'' என, பா.ம.க., மாநில தலைவர் அன்புமணி கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் பா.ம.க., வேட்பாளர் அன்புமணி மிகப் பெரிய வெற்றியை பெறுவார். இத்தேர்தல் பணத்தை மட்டுமே நம்பியுள்ள தி.மு.க.,விற்கும், மக்கள் பலத்தை நம்பியுள்ள எங்கள் வேட்பாளருக்கும் தான் போட்டி.
தொகுதியில் தேர்தல் பணிக்காக 10 அமைச்சர்கள் தங்கி வாக்காளர்களை விலைக்கு வாங்கலாம் என்ற கனவில் உள்ளனர். அது நடக்காது. அமைச்சர்களை தொகுதியிலிருந்து வெளியேற்ற தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளோம்.
விக்கிரவாண்டி தொகுதியில் 1970--72ல் ஒரே ஒரு கரும்பு தொழிற்சாலை துவக்கியதை தவிர வேறு எதுவும் இல்லை. இதுவரை ஆண்ட, ஆளுகின்ற கட்சிகள் விழுப்புரம் மாவட்டத்திற்கு எதையும் செய்யவில்லை. இத்தேர்தலை நாங்கள் சமூக நீதி அடிப்படையில் பார்க்கிறோம். சமூகநீதி பற்றி பேச தி.மு.க.,விற்கு தகுதி இல்லை.
கருணாநிதி காலத்து தி.மு.க., வேறு. இப்போது உள்ள ஸ்டாலின் தி.மு.க., வேறு. தி.மு.க., விற்கும் சமூகநீதிக்கும் தொடர்பில்லை.
ஸ்டாலின் சுற்றியுள்ள அமைச்சர்களின் பேச்சை கேட்டு செயல்படுகிறார். அவர்கள் அமைச்சர்கள் அல்ல, வியாபாரிகள். கடந்த 3 ஆண்டுகளாக இடஒதுக்கீடு கொடுப்பதாக கூறி ஏமாற்றி விட்டனர்.
அ.தி.மு.க., தேர்தல் புறக்கணிப்பு குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. இங்கு பேசிய வன்னியர் சமூக அமைச்சர்கள் எல்லாம் பா.ம.க.,வின் மீது குற்றச்சாட்டுகின்றனர். அவர்கள் இன்று அமைச்சர்களாக இருப்பதற்கு பா.ம.க., தான் காரணம்.
மணிமண்டபம் கட்டுவதாக கூறிக் கொள்ளும் தி.மு.க.,வினர், அதனால் மக்களுக்கு என்ன பயன்? வேலை வாய்ப்பு ஏதாவது கிடைக்குமா? தியாகி குடும்பத்திற்கு கொடுக்கும் ரூ.3,000 ஓய்வூதியத்தால் என்ன பயன்? இட ஒதுக்கீட்டு தியாகிகள் குடும்பத்திற்கு நாங்கள் ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் கொடுக்கிறோம். பீகாரில் 1.86 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் கொடுத்து அக்குடும்பங்கள் முன்னேற்ற முயற்சி எடுத்துள்ளனர். இதுதான் சமூகநீதி. நீட் தேர்வு தேவையில்லை என்பது எங்கள் நிலைப்பாடு.
கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய சாவு குறித்து அரசு விசாரணை மேற்கொண்டு உண்மையை தெரியப்படுத்தட்டும். கள்ளச்சாராய சாவைவிட டாஸ்மாக் சாராயத்தால் ஏற்படும் சாவு பயங்கரமானது. இதனால் எத்தனை குடும்பங்கள் நடுவீதிக்கு வந்துள்ளன என, எண்ணிப் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர், கூறினார்.