Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ கைதி குடும்பத்தினரிடம் தகவல் பரிமாறிய ஆலோசகருக்கு 'கம்பி'

கைதி குடும்பத்தினரிடம் தகவல் பரிமாறிய ஆலோசகருக்கு 'கம்பி'

கைதி குடும்பத்தினரிடம் தகவல் பரிமாறிய ஆலோசகருக்கு 'கம்பி'

கைதி குடும்பத்தினரிடம் தகவல் பரிமாறிய ஆலோசகருக்கு 'கம்பி'

ADDED : ஜூலை 13, 2024 01:13 AM


Google News
பாகாயம்:வேலுார் தொரப்பாடியில் உள்ள, மத்திய ஆண்கள் சிறையில், 650க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இங்கு, திருப்பத்துார் மாவட்டம், அச்சமங்கலத்தைச் சேர்ந்த அருணாச்சலம், 24, மனநல ஆலோசகராக பணிபுரிந்தார். சிறையில் உயர் பாதுகாப்பு கைதிகள், ரவுடி கைதிகளின் முன்னேற்றத்திற்கு, ஆறு மாதங்களாக மனநல ஆலோசனை வழங்கி வந்தார்.

கடந்த, 3ம் தேதி ஜெயிலர் அருள்குமரன் சிறை வளாகத்தில் ரோந்து பணியில் இருந்தபோது, அருணாச்சலம் உயர் பாதுகாப்பு கைதி ஒருவரிடம் வெகுநேரமாக பேசிக் கொண்டிருந்தார். சந்தேகமடைந்த ஜெயிலர் அருள்குமரன், அதுபற்றி கேட்டபோது, அருணாச்சலம் முரண்பட்ட தகவல்களை தெரிவித்தார்.

தொடர்ந்து, அவரது மொபைல்போனை பறிமுதல் செய்து யார் யாரிடம் பேசி உள்ளார் என்ற விபரங்களை ஆய்வு செய்ததில், அவர், கைதிகளின் குடும்பத்தினர், வக்கீல்களிடையே அடிக்கடி பேசி, சிறை விதிமுறைகளை மீறி 'மீடியேட்டராக' செயல்பட்டது தெரியவந்தது. பாகாயம் போலீசார் அருணாச்சலத்தை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us