/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ வேலுாரில் சிப்பாய் புரட்சியின் 218ம் ஆண்டு நினைவு தினம் வேலுாரில் சிப்பாய் புரட்சியின் 218ம் ஆண்டு நினைவு தினம்
வேலுாரில் சிப்பாய் புரட்சியின் 218ம் ஆண்டு நினைவு தினம்
வேலுாரில் சிப்பாய் புரட்சியின் 218ம் ஆண்டு நினைவு தினம்
வேலுாரில் சிப்பாய் புரட்சியின் 218ம் ஆண்டு நினைவு தினம்
ADDED : ஜூலை 10, 2024 09:59 PM
வேலுார்:சிப்பாய் புரட்சியின், 218ம் ஆண்டு தினத்தையொட்டி, வேலுார் மக்கான் சந்திப்பிலுள்ள சிப்பாய் புரட்சி நினைவு துாணிற்கு, மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்திய விடுதலைக்கான விதைகள், தென் தமிழகத்தில் முதன் முதலில் பாளையக்காரர்கள் மற்றும் மைசூரின் திப்பு சுல்தானால் துவக்கப்பட்டு, பின் ஆங்கிலேயேருக்கு அச்சத்தை தேற்றுவித்த சிப்பாய் புரட்சி, வேலுார் கோட்டையில், 1806 ஜூலை, 10ல் நடந்தது.
வேலுார் கோட்டையில், பிரிட்டிஷ் இந்திய படைக்குள் இருந்த, இந்திய சிப்பாய்கள், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படையின் தளபதி பான்கோட் உள்ளிட்ட, 100 பிரிட்டிஷ் படையினரை சுட்டுக் கொன்றனர்.
அப்போது, பிரிட்டிஷ் கர்னல் கில்லஸ்பி, பீரங்கிகளால் இந்திய வீரர்களின் எழச்சியை அடக்கியதில், நுாற்றுக்கணக்கான இந்திய வீரர்கள் ரத்தம் சிந்தி தங்கள் இன்னுயிரை சுதந்திரத்தின் விதைகளாக்கினர். இதன், 218ம் ஆண்டு நினைவு தினம் நேற்று வேலுாரில் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, வேலுார் மக்கான் சிக்னலில் நிறுப்பட்டுள்ள சிப்பாய் புரட்சி நினைவுத்துாண் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நினைவு துாணில் கலெக்டர் சுப்புலெட்சுமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன், தி.மு.க., - எம்.எல்.ஏ., கார்த்திகேயன் உள்ளிட்டோர் மலை வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து என்.சி.சி., மாணவர்கள், முன்னாள் படை வீரர்கள், பொதுமக்கள் மலர்கள் துாவி மரியாதை செலுத்தினர்.