/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ 2வது மனைவியின் மகளிடம் சில்மிஷம் செய்தவருக்கு காப்பு 2வது மனைவியின் மகளிடம் சில்மிஷம் செய்தவருக்கு காப்பு
2வது மனைவியின் மகளிடம் சில்மிஷம் செய்தவருக்கு காப்பு
2வது மனைவியின் மகளிடம் சில்மிஷம் செய்தவருக்கு காப்பு
2வது மனைவியின் மகளிடம் சில்மிஷம் செய்தவருக்கு காப்பு
ADDED : ஜூலை 13, 2024 10:16 PM
குடியாத்தம்:வேலுார் மாவட்டம், குடியாத்தத்தைச் சேர்ந்த, 50 வயது தனியார் நகைக்கடை ஊழியர். இவரது முதல் மனைவி, விவாகரத்து பெற்று சென்று விட்டார். இந்நிலையில், இரண்டாவதாக, 48, வயதுள்ள விவாகரத்து பெற்ற மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
அப்பெண்ணுக்கு, எட்டாம் வகுப்பு படிக்கும், 14 வயது மகள் உள்ளார். நேற்று முன்தினம் மகள் வீட்டில் தனியாக இருந்தபோது, அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த மகள் அக்கம் பக்கத்திலுள்ள உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார், தனியார் ஊழியரை போக்சோவில் கைது செய்தனர்.