ADDED : ஜூலை 15, 2024 01:27 AM
குடியாத்தம்: வேலுார் மாவட்டம் திருவலத்தில் இருந்து குடியாத்தம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு, ரேஷன் அரிசி கடத்துவதாக, கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.
கலெக்டர் சுப்புலெட்சுமி உத்தரவின்படி, குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலர் வெங்க-டேசன் மற்றும் வருவாய் துறையினர் நேற்று காலை, குடியாத்தம் அடுத்த சேத்துவாண்டை பகுதியில் வாகன சோதனை நடத்தினர். இரு லாரிகளை சோதனை செய்தனர். அதில், 70 டன் ரேஷன் அரிசி இருந்தது. பறிமுதல் செய்து, வேலுார் மாவட்ட ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைத்தனர். மேலும், லாரி டிரைவர்களான திருச்சி மாவட்டம் லால்குடி பிரபாகரன், 20; திரு-வாரூர் மாவட்டம் வசந்த், 23, என இருவரையும், குடியாத்தம் டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.