/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சி - சென்னை மேம்பாலம் சேதம் போக்குவரத்து மாற்றம்திருச்சி - சென்னை மேம்பாலம் சேதம் போக்குவரத்து மாற்றம்
திருச்சி - சென்னை மேம்பாலம் சேதம் போக்குவரத்து மாற்றம்
திருச்சி - சென்னை மேம்பாலம் சேதம் போக்குவரத்து மாற்றம்
திருச்சி - சென்னை மேம்பாலம் சேதம் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜன 13, 2024 01:03 AM
திருச்சி:திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் பகுதியில், இரண்டு ரயில்வே பாலங்கள் உள்ளன. இதில், இடதுபுறமுள்ள திருச்சி - சென்னை வழித்தட பாலத்தின் ஒரு பகுதியில், மண் அரிப்பு ஏற்பட்டு, நேற்று முன்தினம் இரவில் பழுது ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வில், மண் அரிப்பால் மேம்பாலம் பலவீனம் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளதால், முதல்கட்டமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், பொன்மலை ஜி கார்னரிலிருந்து, செந்தண்ணீர்புரம் வரை, 1 கி.மீ., வரை, வலதுபுற பாலம் மற்றும் சாலை இருவழிப்பாதையாக்கப்பட்டது.
மேலும் மதுரை, திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள், ஜி கார்னர் முன்பாக வலதுபுறம் பாலத்திற்கு ஏறிச்செல்லும் வகையிலும், செந்தண்ணீர்புரம் சென்று இடதுபுறம் சாலைக்கு திரும்ப ஏதுவாக மீடியன்களும் இடித்து அகற்றப்பட்டன.
அதேபோல, சென்னையிலிருந்து திருச்சி, மதுரை வரும் வாகனங்கள், ஜி கார்னர் சர்வீஸ் சாலையில் வந்து, ரஞ்சிதபுரம் பஸ் அருகில் திரும்பி பாலத்தில் ஏறும் வகையில், அங்கிருந்த தடுப்புகளும் அகற்றப்பட்டு, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
அந்த இடத்தில் பராமரிப்பு பணி முடிய, 15 நாட்கள் ஆகும் என்பதால், தற்போதுள்ள போக்குவரத்து மாற்றம் தொடரும் என கூறப்படுகிறது. இந்த மாற்றத்தால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.