/உள்ளூர் செய்திகள்/திருச்சி/14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேருக்கு 20 ஆண்டு சிறை14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேருக்கு 20 ஆண்டு சிறை
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேருக்கு 20 ஆண்டு சிறை
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேருக்கு 20 ஆண்டு சிறை
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேருக்கு 20 ஆண்டு சிறை
UPDATED : ஜன 12, 2024 12:23 PM
ADDED : ஜன 11, 2024 11:03 PM
திருச்சி:திருச்சியில், 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேருக்கு, மகளிர் நீதிமன்றம், 20 ஆண்டு சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
கடந்த 16.8.2020ல், திருச்சி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பசுபதி, 27, வரதராஜ், 29, திருப்பதி, 29, ஆகியோர் சேர்ந்து, வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்த புகார்படி, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, 3 பேரையும் கைது செய்தனர். கடந்த 23.9.2020ல், இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை, மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீவத்சன், போக்சோ சட்டப்படி, 3 பேருக்கும் 20 ஆண்டு சிறை தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
மேலும், 2 சட்டப்பிரிவுகளில், 6 ஆண்டு சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும், என்று உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு தரப்பில், 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்துச் சென்ற போது, பசுபதி, திருப்பதி ஆகியோர் நீதிமன்ற கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்துள்ளனர். இதில், பலத்த காயமடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.[21:40, 11/01/2024] Dinamalar: ok[21:52, 11/01/2024] Try Sundarrajan1: 11.1.24 :
தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு
புதுக்கோட்டை, ஜன. 11- கந்தர்வகோட்டை அருகே, தச்சன்குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு, காளை உரிமையாளருக்கு உதவியாக வந்த வாலிபர் ஒருவர் காளை முட்டியதில் காயமடைந்து சிகிச்சை பெற்றவர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே, தச்சன்குறிச்சி கிராமத்தில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு, கடந்த 6ம் தேதி நடைபெற்றது, இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டன. இதில், மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம், அம்பேத்கர் தெருவை சேர்ந்த ராஜு மகன் மதுரா, 18, இவரது உறவினரின் ஜல்லிக்கட்டு காளை, தச்சன்குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டது. அவருடன் மதுராவும் ஜல்லிக்கட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று, சீறிப்பாய்ந்து மதுராவை முட்டி தள்ளியது.
இதில், வயிற்றில் படுகாயம் அடைந்த மதுராவை அருகில் இருந்த மருத்துவவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மதுரா சிகிச்சை பலனின்றி, இன்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து, கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.