/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ சாக்கடையில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு சாக்கடையில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
சாக்கடையில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
சாக்கடையில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
சாக்கடையில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
ADDED : செப் 23, 2025 06:25 AM
திருவெறும்பூர்; பாதாள சாக்கடை அடைப்பை எடுக்க இறங்கிய இரு ஒப்பந்த தொழிலாளர்கள், விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே முத்துநகர் கார்மெல் கார்டன் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு எடுக்க, திருச்சி மாநகராட்சி கான்ட்ராக்டர் சுப்பையாவிடம் தெரிவிக்கப்பட்டது.
அவர், தன்னிடம் ஒப்பந்த அடிப்படையில் மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூரைச் சேர்ந்த ரவி, 38, சின்னசேலத்தைச் சேர்ந்த பிரபு, 32, ஆகியோரை அப்பணிக்கு அனுப்பி வைத்தார். நேற்று மாலை இருவரும் பாதாள சாக்கடைக்குள் இறங்கி, அடைப்பு எடுக்க முயன்றபோது விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் மாநகராட்சி உதவி பொறியாளர் பிரசாந்த் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்துள்ளனர்.
திருவெறும்பூர் தீயணைப்பு படையினர் ரவி, பிரபு உடல்களை மீட்டனர். திருவெறும்பூர் போலீசார் விசாரிக்கின்றனர். தொழிலாளர்கள் எவ்வித பாதுகாப்பு கவசங்களும் அணியாமல் சென்றதால் உயிரிழப்பு ஏற்பட்டது. இது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.